Tamilnadu

“கொரோனா மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி வந்தாலும் தி.மு.க அரசு எதிர்க்கொள்ளும்” : அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

கலைஞரின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அடுத்து குன்றத்தூர் அருகே உள்ள பரணிபுத்தூரில் தி.மு.க சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள், முடித்திருத்தம் செய்வோர், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என ஆயிரத்திற்கும மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

பின்னர் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

கொரோனாவின் மூன்றாவது அலை வந்தாலும், எந்த நெருக்கடியான நிலை வந்தாலும் தி.மு.க அரசு அதனை எதிர்கொள்ள தயாரக உள்ளது. கடந்த ஆட்சியில் எந்தவொரு முன்னேற்பாடும் செய்யவில்லை.

ஆனால் தற்போது தி.மு.க அரசு அனைத்து வசதிகளும் செய்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் வீட்டிலேயே எளிய முறையில் ஆவி பிடிக்க வேண்டும். இந்த அரசு மக்களுக்கான அரசு” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீடு : ஏ++ மதிப்பீடு பெற்று முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு!