Tamilnadu
பயிற்சியின்போது 19 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை : தடகள பயிற்சியாளரை கைது செய்து போலிஸார் தீவிர விசாரனை!
சென்னை அடையாரு அருகே செயல்பட்டு வரும் விளையாட்டு அகாடமியில், தடகள பயிற்சியாளராக நாகராஜன் ஈடுபட்டு வந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்று வரும் நிலையில், பயிற்சியாளர் நாகராஜன் எங்களுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் மாணவிகள் சிலர் புகார் அளித்திருந்தனர்.
இதுதொடர்பாக மாணவிகள் அளித்த புகாரில், பயிற்சியாளர் நாகராஜன் எங்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இரவு நேரங்களில் தங்களது செல்போன் வாட்ஸ் அப் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாகராஜனிடம் பயிற்சி பெற்றுவந்த 19 வயது மாணவி ஒருவர், பயிற்சியின்போது பாலியல் தொல்லைக்கொடுத்தாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிதாக பாதிக்கப்பட்ட பெண் பூக்கடை அனைத்து மகளிர் மகளிர் காவல் ஆய்வாளரிடம் நேரடியாக புகார் வழங்கினார்.
இதனையடுத்து மாணவி அளித்தபுகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்திவருந்தனர். இந்நிலையில், நேற்று நாகராஜன் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் மீண்டும் போலிஸார் அவரைக் கைது செய்தனர்.
மேலும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் மற்றும் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை பயிற்சியாளர் நாகராஜன் மீது 10க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், புகாரின் படி தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலிஸார் தெரிவித்தனர்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!