Tamilnadu

குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. இதனால் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு உடை ஆகிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, முழுவதும் சேதமடைந்த கூரை வீட்டிற்கு தலா 5,000 ரூபாயும், பகுதியளவு சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா 4,100 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்படைந்த மானாவாரி, நீர்ப்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு 10,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் பல்லாண்டு கால பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.