Tamilnadu
“பெட்ரோல் டீசல் விலை மூலம் வசூல் வேட்டை” : தேர்தல் முடிந்ததும் சுயரூபத்தை காட்டிய மோடி அரசு!
பெட்ரோல் விலையைக் கேட்டாலே வயிறு எரிகிறது. 90 ரூபாயாக ஆகிவிட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், விரைவில் ரூ.100 ஆகப் போகிறது. டீசல் விலை 84 ரூபாயை நெருங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தனிப்பட்ட அந்தப் பொருள்களோடு நிற்பது இல்லை. அத்தோடுசேர்ந்து அனைத்தும் விலை கூடுவதற்கு இவை அடிப்படையாக அமையும்.
இந்நிலையில், கொரோனா நெருப்பே அணையாத நிலையில் மேலும் மேலும் விலையேற்றி மக்களை மோடி அரசு வதைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த மாதம் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றதால் பெட்ரோல் விலை அதிகரிக்காமல் இருந்தது.
ஆனால், தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று சென்னையில் 93 ரூபாய் 84 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை இன்று 94 ரூபாய் 13 காசுகள் என 29 காசுகள் உயர்ந்துள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது என்றும், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பெட்ரோல் மீதான வரியை மத்தியரசு குறைக்க வேண்டும் என்றும் புதிதாக பொறுப் பேற்றிருக்கும் மாநில அரசு வரியை குறைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Also Read
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!