Tamilnadu
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னணியில் தி.மு.க: 20,704 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடி முன்னிலை! #DMK4TN
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கானன வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணி 142 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பொன்முடி, பா.ஜ.க வேட்பாளர் கலிவரதனை விட 20,704 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
செஞ்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் 33 ஆயிரத்து 333 வாக்குகள் பெற்று முன்னிலையில் பெற்றுள்ளார். விழுப்புரம் தி.மு.க வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் 781 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சி.வி சண்முகம் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
அதேபோல் பெரம்பலூர் (தனி) தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ம.பிரபாகரன் 6547 வாக்குகள் முன்னிலை வகித்துவருகிறார். செங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் மு.பெ.கிரி, அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணுவைவிட 4761 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசபாக்கம், வந்தவாசி ஆகிய ஐந்து தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
Also Read
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!
-
“புதுச்சேரி - கொலைச்சேரி ; திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா.. பந்தாடப்பட்ட பாகிஸ்தான்!