Tamilnadu
“பா.ஜ.கவுக்கு சேவகம் செய்த அமைச்சர்களுக்கு பாடம் புகட்டிய தமிழக மக்கள்” : தோல்வியை தழுவிய அ.தி.மு.க !
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 165 இடங்களில் தி.மு.க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் 9 பேர் படுதோல்வியை சந்தித்துள்ளனர். குறிப்பாக, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமார் 27் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் மூர்த்தியிடம் படுதோல்வியடைந்தார். ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தி.மு.க வேட்பாளர் சா.மு.நாசரிடம் தோல்வியடைந்தார்.
அதேபோல், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3,468 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் தங்க பாண்டியனிடம் தோல்வியடைந்தார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க வேட்பாளர் ஆர்லட்சுமணனிடம் 15,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்ல்மண்டி நடராஜன், தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் 18,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா, கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத், மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோரும் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
Also Read
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!
-
மக்களுக்கு வழங்கும் ‘பை’யில் கூட ஊழல்! : த.வெ.க.வின் முகமூடியை கிழித்து காய வைத்த பெண்!
-
பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!
-
கோவையில் 1000 சவரன் நகை திருட்டு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
-
“ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?” : தி.மு.க கடும் கண்டனம்!