Tamilnadu
20 ஆயிரத்தை எட்டவிருக்கும் கொரோனா தொற்று... இன்று 18,692 பேருக்கு பாதிப்பு... 113 பேர் பலி! #CoronaUpdate
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,43,571 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 18,692 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போதைய நிலையில் 1,15,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,66,756 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 16,007 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,37,582 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 52 பேர் தனியார் மருத்துவமனையிலும், 61 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,046 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 5,473 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,33,804 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,215 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 1113 பேருக்கும், திருவள்ளூரில் 905 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?