Tamilnadu
“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியை சேர்ந்த ரங்கராஜன் (62) விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு தொழில் நஷ்டத்தால் ரூ. 1 கோடி அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரங்கராஜனை, இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மனைவி ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜா ஆகியோர் டிஸ்சார்ஜ் செய்து, ஆம்னி வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே செல்லும்போது அவர்கள் சென்ற ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ரங்கராஜன் மட்டும் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், சாலையில் செல்லும்போது ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததாகவும், உள்ளே இருந்த ரங்கராஜனை காப்பாற்ற முடியவில்லை என இருவரும் கூறியுள்ளனர்.
அவர்கள் சொல்வதில் போலிஸாருக்கு சந்தேகம் ஏற்படவே, தொடர்ந்து விசாரித்ததில், ரங்கராஜன் 3 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருந்தும், அதில் வாரிசுதாரராக மனைவி ஜோதிமணியை குறிப்பிட்டிருந்ததும், இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்று கடன்களை கட்டுவதற்காக கணவனை ஆம்னி காரிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஜோதிமணி, ராஜா ஆகியோரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியே கணவனைப் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கல்வி இருந்தால் வாழ்க்கையே மாறும்” : நடிகர் நடிகர் கார்த்தி பேச்சு!
-
“மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் அரசு” : நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு!
-
“கல்வியே திராவிட மாடல் அரசின் மூலதனம்” : 'உலகம் உங்கள் கையில்' விழாவில் நடிகர் மணிகண்டன் பேச்சு!
-
“உலகம் உங்கள் கையில்” : மாணவர்களுக்கு டிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!