Tamilnadu
“காணாம போறதுக்கு மத்த கட்சி வேட்பாளரா.. தி.மு.க” - மீண்டும் கொரோனா முன்களப்பணிக்குத் திரும்பிய எழிலன்!
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க, தேர்தல் நேரத்தில் பற்பல திட்டங்களை நிறைவேற்றுவதாக பொய்யாகக் கூறி வாக்கு சேகரித்தனர். அ.தி.மு.கவினரின் பொய் பரப்புரைகளை பொதுமக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றுமே தமிழ்நாடு- தமிழர் நலனுக்காக எப்போதும் செயல்படும் இயக்கம் தி.மு.க என்பதும் மக்கள் அறிந்ததே. அதன் காரணமாக பெரும்பாலானோர் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க சார்பில் மருத்துவர் எழிலன் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
பழகுவதற்கு இனிமையான நபரான மருத்துவர் எழிலன், சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட காலம், நீட் எதிர்ப்பு, சி.ஏ.ஏ எதிர்ப்பு, கொரோனா தடுப்பு என தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர் என்பதால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆயிரம் விளக்கு தொகுதி மக்களைச் சந்தித்து வீடுவீடாக வாக்கு சேகரித்து, வாக்குறுதிகளை அளித்து தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அவரது வெற்றி உறுதி எனக் கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
தேர்தல் பணிக்காகச் சுற்றிச் சுழன்று களப்பணியாற்றிய மருத்துவர் எழிலன், வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தற்போது மருத்துவப் பணிக்குத் திரும்பியுள்ளார்.
முழு கவச உடையுடன் கொரானா சிகிச்சை பிரிவில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மருத்துவர் எழிலன், “ ‘நீங்கள் தான் வந்து பார்க்க வேண்டும்’ என்று நோயாளிகள் கூப்பிடும்போது... ஓய்வுக்கு ஓய்வு தான்” எனத் தெரிவித்துள்ளார். மருத்துவர் எழிலனின் இந்தப் பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!