Tamilnadu
உணவுப் பற்றாக்குறை? ஊட்டியில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டு யானை - கண்டுகொள்ளாத வனத்துறை!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது வாழைத்தோட்ட கிராமம். இந்த கிராமத்தில் ரிவோல்டோ என்ற ஆண் காட்டு யானை ஒன்று அண்மைக்காலமாக அந்த கிராமத்தில் முகாமிட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களாக மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாத ரிவோல்டோ என்ற ஆண் காட்டு யானை, தற்போது மாலை நான்கு மணிக்கெல்லாம் வாழைத்தோட்டம் பேருந்து நிலையம் மற்றும் கிராமத்தில் உள்ள தெருவுக்குள் நடந்து செல்கிறது.
அத்துடன் வீட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப் பொருட்களை தேடும் இந்த யானை, வாழைத்தோட்ட கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால், பிளாஸ்டிக் கழிவுகள் உடலுக்குள் சென்று காட்டு யானை உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு கிராமப்பகுதியில் உலாவரும் இந்த யானையை வனத்துறையினர் உடனடியாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் அல்லது முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!