Tamilnadu
கூடங்குளம் 5,6 அணு உலை: அபாயகரமான திட்டத்துக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளதா? - டி.ஆர்.பாலு கேள்வி!
திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி. ஆர். பாலு, நேற்று (10 மார்ச் 2021) மக்களவையில், சுற்றுச் சூழலை பாதிக்கும், கூடங்குளம் அணு மின் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் , தமிழ் நாட்டிலுள்ள, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு மின் உலைகள் துவங்கப்பட உள்ளதா? எனவும், அபாயகரமான தீங்கை விளைவிக்கும் 6,000 மெகாவாட் திட்டத்திற்கு, தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? எனவும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்றும் விரிவான கேள்வியை, மக்களவையில், டி. ஆர். பாலு, எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பிரதமர் சார்பில், மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு:
“தமிழ் நாட்டிலுள்ள, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1,000 மெகாவாட் திறனுடைய, ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலைகள், ஒவ்வொன்றும், அடுத்த 66 மற்றும் 75 மாதங்களில், திறன் மிகுந்த ஒப்பந்தக்காரர்களால் கட்டி முடிக்கப்படவுள்ளது.
இந்திய அணு சக்தி கழகத்தின் மேற்பார்வையிலும், அணு சக்தி ஒழுங்காற்று ஆணையத்தின், பாதுகாப்பு விதிகளின் படியும், இந்த ஆறு அணு உலைகளுக்கான, தடையில்லா சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழலுக்கும், பொது மக்களுக்கும், எவ்விதமான ஆபத்தும் நிகழ வாய்ப்பில்லை.
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ஆகியன, மத்திய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலம், முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால், இத்திட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்று இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.
Also Read
-
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!
-
U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி.. துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!
-
மத்திய பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடல்! : ஒன்றிய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
“பிரதமர் மோடி மிகவும் ஆபத்தானவர்” : நடிகர் கிஷோர் விமர்சனம்!