Tamilnadu
கொடி பறக்குதா - திருச்சியில் பிரமாண்டமாக தயாராகும் தி.மு.க பொதுக்கூட்டம் ! (Photo Album)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட முன்னணி கட்சிகள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தொலைநோக்குப் பார்வை கொண்ட - தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டங்கள் அந்த இலட்சியப் பிரகடனத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியிடுவதற்காக மார்ச் 7-ஆம் நாள் தீரர் கோட்டமாம் திருச்சியிலே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சிறுகனூரில் தி.மு.கவின் பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
"விடியலுக்கான முழக்கம்" என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொதுக்கூட்டம் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது இந்த பொதுக்கூட்டத்தில் “தமிழகத்தின் இருட்டை முழுமையாக விரட்டியடிக்கும் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டப் பிரகடனத்தை மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் வெளியிட இருக்கிறேன்” எனக் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. திருச்சியில் நடைபெறவிருக்கும் சிறப்புப் பொதுக்கூட்டத்திற்கான பணிகளை கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மேற்கொண்டு வருகிறார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!