Tamilnadu

“எப்படி திருப்பி போட்டாலும் வரலயே” - கமல் பேச்சை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த நிலையில், அவர் ம.நீ.ம கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியில் இணைந்த விழாவில் பேசிய பொன்ராஜ், “விமானத்தில் கலாம் கமலுடன் பேசிக்கொண்டு வந்தார், பிறகு கலாமிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்டேன். கமலை அரசியலுக்கு வரச்சொன்னேன் என்றார்” எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” எனப் பேசியுள்ளார். கமலின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

எப்படி திருப்பிப் போட்டாலும் நீங்க சொன்னமாதிரி வரலையே என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள். சுவாரஸ்யமாகப் பேசுவதாக நினைத்து வாய்க்கு வந்தபடி உளறும் கமல்ஹாசனின் செயல்கள் இப்படி கிண்டல் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இதுதொடர்பாக தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “Kalam - m a l a k ; கலாம் - ம் லா க கிட்டக்கூட வரவில்லையே வாத்தியாரே .. ஒரே confusions” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "கூட்டணியில் சேர்க்குறீங்களா.. நாங்க சேர்த்துக்கட்டுமா?”: அ.தி.மு.கவை மிரட்டும் பா.ஜ.க- பம்மும் பழனிசாமி!