Tamilnadu
முதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ். இவர் மீது கொரோனா காலத்தில் அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகள் எழுந்தது. குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமான சொகுசு பங்களா கட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதுமட்டுமல்லாது, அவரது கணவரான சிறப்பு டி.எஸ்.பி ராஜேஷ்தாஸ் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமாக ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி ஆகிய இடங்களில் பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அங்கு அடிக்கடி கணவன், மனைவி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும் கொரோனா காலத்தில் பல டென்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தனர். அதன்பிறகு பீலா ராஜேஷைக் காப்பாற்ற வேண்டும் என காரணமே சொல்லாமல் ஆளும் அதிமுக அரசு அவரை சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது.
மேலும் இதனால் சந்தேகம் அதிகரிக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எடப்பாடி அரசின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஊழல் முறைகேடுகளில் சிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பீலா ராஜேஷைக் காப்பாற்ற வேண்டும் என அரசு முனைப்புக் காட்டுவதாக குற்றச்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசின் தலைமை அலுவலகம் பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செய்ய வேண்டும் என தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அந்த கடிதத்திற்கு அரசு என்ன பதில் அளித்தது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எந்த வித தகவலையும் அ.தி.மு.க அரசு முழுமையாக வெளியிடவில்லை.
இதனிடையே தற்போது பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் தாஸ் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ், மாவட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
குறிப்பாக, ராஜேஷ் தாஸ் மீது தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதனிடையே ராஜேஷ்தாஸ் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. ராஜேஷ்தாஸ் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியபோதே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.
இப்படி, முறைகேடுகளுக்கும், அடாவடிகளுக்கும் பெயர்போன அதிகாரியை சிறப்பு டி.ஜி.பியாக எடப்பாடி பழனிசாமி நியமித்ததற்குக் காரணம், தேர்தல் நேரத்தில் தமக்கு உதவுவார் எனத் திட்டமிட்டுத்தானாம். இப்போது பாலியல் புகார் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், தற்போது ராஜேஷ்தாஸ் மீது விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!