தமிழ்நாடு

காவல்துறை சீர்திருத்தத்தை மீறி பதவியில் அமர்த்திய அ.தி.மு.க அரசு : களங்கம் என அன்றே சொன்னது தி.மு.க!

கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் பதவி உயர்வு நடவடிக்கையை முன்பே தி.மு.க கண்டித்தது.

காவல்துறை சீர்திருத்தத்தை மீறி பதவியில் அமர்த்திய அ.தி.மு.க அரசு : களங்கம் என அன்றே சொன்னது தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இதிலும் பெண்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே பல நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்து குற்றவாளிக்கூண்டில் ஏறும் அவல நிலை தொடர்கிறது. இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய ஆளும் அ.தி.மு.க அரசும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

அதன் விளைவாக காவல்துறையில் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ், மாவட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

காவல்துறை சீர்திருத்தத்தை மீறி பதவியில் அமர்த்திய அ.தி.மு.க அரசு : களங்கம் என அன்றே சொன்னது தி.மு.க!

இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் ராஜேஷ்தாஸ் மீது விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீது முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக, ராஜேஷ்தாஸ், சிறப்பு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டது, உச்சநீதிமன்ற வரையறைகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு அளித்து - சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி.யாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தால் “பிரகாஷ் சிங்” வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-க்கும் முற்றிலும் எதிரானதாகும்.

காவல்துறை சீர்திருத்தத்தை மீறி பதவியில் அமர்த்திய அ.தி.மு.க அரசு : களங்கம் என அன்றே சொன்னது தி.மு.க!

தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக - அதாவது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக திரிபாதி ஐ.பி.எஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் - தேர்தல் காலப் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக போலிஸ் தலைமையகத்தில் இன்னொரு டி.ஜி.பி. அந்தஸ்துள்ள அதிகாரியை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும். தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ் பெற்ற தமிழகக் காவல்துறைக்கு - குறிப்பாக சட்டம் - ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்க இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்திருப்பது வேதனைக்குரியது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலைகள், அதுவும் கூலிப்படைகளை வைத்து நடத்தப்படும் கொலைகள் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமாகி, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

காவல்துறை சீர்திருத்தத்தை மீறி பதவியில் அமர்த்திய அ.தி.மு.க அரசு : களங்கம் என அன்றே சொன்னது தி.மு.க!

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அ.தி.மு.க. ஆட்சியின் டி.ஜி.பி. நியமனங்களில் எல்லாம் பிரகாஷ் சிங் வழக்கில் வரையறுத்துச் சொல்லப்பட்ட காவல்துறைச் சீர்திருத்தம் கைவிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மீறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் நேரத்தில் இரு வருடப் பதவிக் காலம் கொடுத்து டி.ஜி.பி. ஆக்குவது, முறைப்படி 2 வருட பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்ட டி.ஜி.பி.யை நள்ளிரவில் ராஜினாமா செய்ய வைப்பது என்று தொடர்ந்து - இப்போது புதிய உத்தியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரை டம்மியாக்குவதற்கு, அவருக்கு இணையாக ஒரு டி.ஜி.பி.யை அதே பொறுப்பில் அமர்த்துவது வரை, அ.தி.மு.க. அரசின் அத்துமீறல் படலம் நீண்டு வந்து நிற்கிறது.

“இரட்டைத் தலைமையால்” அ.தி.மு.க.விற்குள் நடக்கும் கூத்துகள், டி.ஜி.பி. அலுவலகத்திலும் அரங்கேறட்டும்- அங்கும் நாமும் ஓ.பி.எஸ்ஸும் அடித்துக் கொள்வது போல் - அதிகாரிகளுக்குள் அடித்துக் கொள்ளட்டும் என்ற இந்த விபரீத விளையாட்டு தமிழகக் காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

காவல்துறை சீர்திருத்தத்தை மீறி பதவியில் அமர்த்திய அ.தி.மு.க அரசு : களங்கம் என அன்றே சொன்னது தி.மு.க!

இரண்டு டி.ஜி.பி.களுக்கு என்னென்ன பொறுப்பு? தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநருக்குக் கட்டுப்பட வேண்டுமா? அல்லது அதே தகுதியில் டி.ஜி.பி.யாக இருக்கும் “ஸ்பெஷல் டி.ஜி.பி.க்கு”கட்டுப்பட வேண்டுமா?

தலைமை அலுவலகத்தில் “பனிப்போர்” துவங்கினால், அது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல் நிலையங்களிலும் எதிரொலிக்கும் ; காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பிரதிபலிக்கும். தமிழகக் காவல்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் அறவே தகர்த்து எறியப்பட்டு விடும்.

ஆகவே “ஒருங்கிணைப்பாளர்”, “இணை ஒருங்கிணைப்பாளர்” என்று அ.தி.மு.க.விற்குள் உருவாக்கியுள்ளது போல், காவல்துறை தலைமையகத்தில் “டி.ஜி.பி.” - “ஸ்பெஷல் டி.ஜி.பி” என்று உருவாக்கியுள்ளதைத் திரும்பப் பெற்று - பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இத்தகைய அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த அ.தி.மு.க தலைமை, காவல்துறைக்கும் தி.மு.க-வுக்கும் இடையே பிரச்சனை உள்ளது என்பது போல பேசித் திரிந்தார்கள். அப்போது உடனே இத்தகைய விமர்சனத்திற்கு தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கண்ணதாசன் பதிலடி கொடுத்து பேசினார்.

குறிப்பாக இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக ராஜேஷ் தாஸைக் கொண்டு வந்து தேர்தல் பணிகளை செய்ய வைக்க எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளதாகவும், டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் அரங்கேறிய ராகேஷ் அஸ்தானா விவகாரம் போலவே தமிழகத்தில் நடக்கவும் வாய்ப்பு உள்ளது என அன்றே தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்சியாக ராஜேஷ் தாஸ் மீது தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதனிடையே ராஜேஷ்தாஸ் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. ராஜேஷ்தாஸ் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியபோதே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.

காவல்துறை சீர்திருத்தத்தை மீறி பதவியில் அமர்த்திய அ.தி.மு.க அரசு : களங்கம் என அன்றே சொன்னது தி.மு.க!

இப்படி, முறைகேடுகளுக்கும், அடாவடிகளுக்கும் பெயர்போன அதிகாரியை சிறப்பு டி.ஜி.பியாக எடப்பாடி பழனிசாமி நியமித்ததற்குக் காரணம், தேர்தல் நேரத்தில் தமக்கு உதவுவார் எனத் திட்டமிட்டுத்தானாம். இப்போது பாலியல் புகார் விஸ்வரூபமெடுத்துள்ளது.

ஆனால் தி.மு.க அன்றே சொன்னதை அலட்சியமாக எடுத்துக்கொண்ட அ.தி.மு.க அரசு இப்போது பேசுவதற்கு பதில் ஏதேனும் வைத்திருக்கிறதா? அல்லது தி.மு.கவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்குமா? என்பதே பலரின் கேள்வியாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories