Tamilnadu
பணம் பறிப்பதற்காக கடைகளை அகற்ற முயன்ற அதிமுகவினர், மாநகராட்சி ஊழியர்கள்: திநகர் வியாபாரிகள் குற்றச்சாட்டு
சென்னை தியாகராய நகரில் சாலையோரமாக 40 வருடங்களுக்கு மேலாக சிறிய கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரும் மாநகராட்சி அதிகாரிகள் சிலரும் சேர்ந்து நீதிமன்றம் அனுமதி வழங்கிய கடைகளை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக புதிதாக வெளி நபர்கள் சிலரை தியாகராய நகர் பகுதிக்கு வரவழைத்து இரவோடு இரவாக தற்காலிகமாக தடை போட வைத்துள்ளனர். இதனால் முன்பு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கும் புதிதாக கடை அமைத்து அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக இந்த அப்புறப்படுத்தும் செயலானது வியாபாரிகளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மாம்பலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாகவும் சிறிது போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Also Read
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!