Tamilnadu
“அண்ணா.. ப்ளீஸ் அடிக்காதீங்க” : தலித் இளைஞரை கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய கும்பல் - தஞ்சையில் பயங்கரம்!
பணத்தை திருடியதாகக் கூறி கூலித் தொழிலாளியின் கண்களை துணியால் கட்டி, மரத்தில் கட்டி வைத்து பின்புறம் பிரம்பால் அடித்து துன்புறுத்திய வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி மேலத் தெரு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்வரின் மகன் ராகுல் (22) கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 5 பேரின் பணத்தை ராகுல் திருடிவிட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், ராகுலை இழுத்துச் சென்று துண்டால் கண்களை கட்டிவைத்து ராகுலின் பின்புறம் பிரம்பால் சரமாரியாகத் தாக்கினார்கள்.
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த ராகுல், “வேணாம் அண்ணா.. வேணாம் அண்ணா.. இனிமே எடுக்க மாட்டேண்ணே.. கொடுத்து விடுகிறேன். பிளீஸ் அடிக்காதீங்க” எனக் கெஞ்சுகிறார். ஆனால் இரக்கம் காட்டாத அந்த கும்பல், தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த ராகுல் மயக்கமடைந்து அந்த இடத்திலேயே சரிந்தார். ஆத்திரம் தீராத அந்த கும்பல் மயக்கநிலையில் இருந்த ராகுலை மேலும் தாக்கியுள்ளனர். இந்த காட்சியை அந்த கும்பலில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர்கள் கடுமையாகத் தாக்கியதில் துடிதுடித்து மயக்கம் அடைந்து சரிந்த கூலி தொழிலாளி வலி பொறுக்க முடியாமல் எலி மருந்து உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இதுவரையும் கொடூரமாக தாக்கிய ஒருவரைக் கூட போலிஸார் கைது செய்யவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !