Tamilnadu
“எதிர்க்கட்சிகளை தொடர்ந்து நிராகரித்தால் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடக்கும்”: தி.மு.க எம்.பி எச்சரிக்கை!
தேஜஸ் விரைவு ரயிலை திண்டுக்கல் சந்திப்பிலும் அமிர்தா விரைவு ரயிலை ஒட்டன்சத்திரம் சந்திப்பிலும் நிறுத்த வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மதுரை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி வேலுச்சாமி, “மத்திய அரசு எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ரயில் நிறுத்த வேண்டுகோளை கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் ரயில்வே நடைமுறையிலுள்ளது.
மேலும் பொதுமக்களிடம் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் எங்களுக்காக இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. பொதுமக்களின் நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
தெற்கு ரயில்வே மண்டல கோட்ட மேலாளரிடம் மனு அளித்துள்ளோம். மனுவை ஏற்கவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிகளையும் கூட்டி குரல் கொடுப்பேன். அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் நாடாளுமன்றம் முன்பு மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
Also Read
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!