Tamilnadu
“யானைகளை காட்டுக்குள் விரட்ட பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும்” - வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!
கோவை வனப்பகுதியில் நாட்டு வெடி வைக்கப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்ட போது, வெடி வெடித்து காயமடைந்த மக்னா யானை, அப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது, யானையின் நாக்கு துண்டானதால் உணவுப்பொருட்களை சாப்பிட முடியமால் சிரமப்பட்டது.
இந்த யானையை பிடித்து உரிய சிகிச்சை வழங்கும்படி தமிழக வனத்துறைக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு எனும் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், ஏற்கனவே காயமடைந்த யானையை மேலும் காயப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து விரட்ட முயற்சித்த செயல் ஏற்றுகொள்ளத்தக்கதல்ல எனவும், பட்டாசு வெடித்து அதை விரட்டிய வனத்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
Also Read: “ரத்தம் சொட்ட சொட்ட காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் யானை உயிரிழப்பு” : ஒரே வாரத்தில் 3 யானைகள் பலி !
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே சிகிச்சை பலனின்றி யானை இறந்துவிட்ட நிலையில், வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட என்ன வழிகாட்டி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாகவும், மக்னா யானை இறந்தது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய, வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது வனத்துறை சார்பில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், யானை உயிரிழந்தது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது..
தொடர்ந்து, யானைகளை காட்டுக்குள் விரட்ட வெடிகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், காயம்பட்ட யானைகளுக்கு சிகிச்சையளிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளர்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!