Tamilnadu
“பூங்கா அமைக்க பாடுபட்டது தி.மு.க MLA.. விளம்பரம் தேடிக்கொள்வது அ.தி.மு.க அமைச்சரா?”- பொதுமக்கள் ஆதங்கம்!
வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் என்.எல்.சி சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் புல்வெளி பூங்கா அமைத்துத் தர வேண்டி குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மூலமாக என்.எல்.சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
அதன்பேரில் வடலுார் சத்திய ஞான சபையைச் சுற்றிலும் சுற்றுச்சுவருடன் கூடிய புதிய புல்வெளி பூங்கா, என்.எல்.சி நிறுவன சி.எஸ்.ஆர் நிதி ரூ.35.90 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க எம்.எல்.ஏ-வின் கோரிக்கையால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பூங்காவை, எந்தவிதத்திலும் இந்தப் பணிக்கு உதவாத அ.தி.மு.க அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்தத் திட்டத்தையும் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தியுள்ளனர் அ.தி.மு.கவினர்.
பூங்கா அமைக்க நிதி வழங்கிய என்.எல்.சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்காமல், பூங்கா அமைப்பதற்காக பாடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏவுக்கும் தகவல் தெரிவிக்காமல் அ.தி.மு.க-வினர் கட்சி நிகழ்ச்சி போல பூங்காவைத் திறந்துவைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“புல்வெளி பூங்கா அமைக்கும் பணிக்காக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெரும் முயற்சி செய்த நிலையில், அவருக்கு கூட தகவல் தெரிவிக்காமல், சிறு துரும்பும் கிள்ளிப் போடாத அமைச்சர் எப்படி திறக்கலாம்?” என தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அடுத்தவர் உழைப்பில் உருவாகும் திட்டங்களுக்கு தமது பெயரில் விளம்பரம் தேடிக் கொள்வதை ‘ஸ்டிக்கர்’ அ.தி.மு.க-வினர் தொடர்ந்து வருவது பொதுமக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!