Tamilnadu
“புயலுக்கு முன் - புயல் தாக்கும் போது - புயலுக்கு பின்” மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள நவர் புயல் நாளை இரவு சென்னை முதல் காரைக்கால் வரையில் இருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக்கடக்க் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, நிவர் புயல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே410 கி.மீதொலைவிலும், சென்னைக்கு 450 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடந்த மூன்று மணி நேரமாக நிவர் புயல் ஒரே இடத்தில் நிலை கொண்டு வலுவடைந்து வருகிறது.
நிவர் புயல் தொடர்ந்து தீவிரபுயலாக வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலை தீவிர புயல் கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27-ஆம் தேதி வரை மழை தொடரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் காலங்களில் போது மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து விவரித்திருக்கிறது தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்.
புயலுக்கு முன் செய்ய வேண்டியவை:
அடையாள அட்டைகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்துங்கள்.
அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் குடிநீரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
டார்ச் லைட், பேட்டரி ரேடியோ, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்ற உபகரணங்களை இருப்பில் கொள்ளுங்கள்.
தாழ்வான மற்றும் புயலால் சேதமடையும் வகையில் இருப்பிடம் கொண்டவர்கள் நிவாரண மையங்களை நாடலாம்.
வாகனங்களை மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம்.
புயல் தாக்கும் போது செய்ய வேண்டியவை:
வீட்டை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியில் வரக்கூடாது. கண்ணாடி ஜன்னல்கள், மரங்கள், மின் கம்பங்கள் போன்ற உடைந்து விழும் பொருட்களுக்கு அருகில் இருக்கக் கூடாது.
புயலின் நடுவில் காற்றின் வீச்சு குறையும். அது புயல் கடந்ததற்கான அறிகுறி அல்ல.
புயல் கடந்ததாக ரேடியோ மூலம் வானிலை ஆய்வு மைய அறிவிப்பு வந்த பிறகே வெளியே வர வேண்டும்.
புயல் கடந்த பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
முறிந்த மின் கம்பங்கள், மரங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்.
தொற்று பரவும் அபாயம் உள்ளதால் காய்ச்சிய நீரை பருகவும்.
ஈரமாக இருக்கும்பட்சத்தில் மின்சாதனப் பொருட்களை இயக்க வேண்டாம்.
கட்டிடங்கள் சேதமடைந்திருப்பின், சீர் செய்யாமல் பயன்படுத்த வேண்டாம். எனத் தெரிவித்துள்ளனர். மேலும், “மக்களே அச்சம் வேண்டாம்... உங்களை பாதுகாக்க நாங்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்போம்” என தமிழ்நாடு காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் (TNDRF) தெரிவித்துள்ளனர்.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !