Tamilnadu
“விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி-யின் தீரம் ஒவ்வொரு தமிழர்களுக்கும் உந்து சக்தியாகும்” : மு.க.ஸ்டாலின்!
“வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்திய விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் தீரம், ஒவ்வொரு தமிழர்களுக்கும் உந்து சக்தியாகும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வ.உ.சிதம்பரனாரின் 84வது நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. தீரமும் தியாகமும் மிகுந்த விடுதலைப் போரில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் போராட்டமும், அதற்காக அவர் அனுபவித்த சிறைக் கொடுமையும் வரலாற்றின் பக்கங்களில் நிறைந்திருக்கிறது.
வெள்ளையர் ஆட்சிக்கெதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்திய அவரது துணிவான முடிவு, இன்றைய கார்ப்பரேட் காலத்தில் தொழில் முனைவோராக முயற்சிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாகும்.
அதிகார வர்க்கம் எந்த வகையில் உரிமைப் போரை நசுக்கும் என்பதற்கு வ.உ.சி-யின் கப்பல் நிறுவனத்தை முடக்கியதும், அவருக்குச் சிறையில் கொடுக்கப்பட்ட செக்கிழுத்தல் - கல் உடைத்தல் போன்ற கடும் தண்டனைகளும் இரத்தச்சரிதமாக பதிவாகி உள்ளது. தாயக விடுதலைக்கும், தமிழ்த் தொண்டுக்கும் தன் தனிவாழ்வு, குடும்பம், சொத்து அனைத்தையும் அர்ப்பணித்த மகத்தான தியாகி வ.உ.சிதம்பரனார்.
அவர் தனது இறுதிக்காலத்தில், திராவிட இயக்கத் தலைவர்களுடன் சேர்ந்து பயணித்ததும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் வ.உ.சி-யின் நினைவைப் போற்றி, அவர் குடும்பத்தினரைக் கௌரவித்து, வ.உ.சி. இழுத்த செக்கினை பொதுமக்கள் காணும் வகையில் செய்து, தியாக வரலாறு நினைவூட்டப்பட்டது.
என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய தியாகத் தலைவர் வ.உ.சி-யை அவரது நினைவுநாளான இன்று (நவம்பர் 18) போற்றி வணங்குகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!