Tamilnadu
“பொதுமக்கள் மீது பட்டாசுகளை வீசி ரகளை - தட்டிக்கேட்ட கணவன், மனைவி வெட்டி படுகொலை” : ஈரோட்டில் பயங்கரம்!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுல்லாம் பகுதியை சேர்ந்த தம்பதி ராமசாமி, அருக்கானி. இவர்களுக்கு மோகனா என்ற மகள் ஒருவர் உள்ளார். திருமணமான மோகனா தீபாவளி பண்டிக்கைக்காக தனது கணவருடன் சிட்டபுல்லாம் பகுதியில் உள்ள தனது அப்பா வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ஊரின் எல்லைப் பகுதியில் மது அருந்திய இளைஞர்கள் சிலர் பட்டாசிகளை பொதுமக்கள் மீது விசியும், வெடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வந்த மோகனா மீது அந்த இளைஞர்கள் பட்டாசுகளை வீசியுள்ளனர்.
இதனால் மோகனாவுக்கும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அங்கு வந்த ராமசாமி மற்றும் அருக்காணி இளைஞர்களை கண்டித்துள்ளனர்.
இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஆவதற்குள், அப்பகுதியைச் சேர்ந்த ஊர் மக்கள் ராமசாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இன்று காலை ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்காணி இருவரும் வீட்டில் வெட்டிக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்தனர்.
இதனையடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார், 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!