தமிழ்நாடு

“ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் பலி”: மதுரையில் நடந்த சோகம்!

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

மதுரை தெற்கு மாசிவீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில், நேற்று நள்ளிரவு எதிர்பாராதமாக தீ விபத்து ஏற்பட்டது. ஜவுளிக்கடையில், ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் எழுந்தது.

தீ வேகமாக பரவியதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பட்டுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் எதிர்பாராத விதமாக சரித்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் மீது விழுந்தது. கட்டிடம் விழுந்ததில், 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

பின்னர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதில், இடிபாடுகளில் சிக்கிய சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

“ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் பலி”: மதுரையில் நடந்த சோகம்!

மேலும் 2 தீயணைப்பு வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டிடம் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜவுளிக்கடை செயல்பட்ட கட்டிடம் மிகவும் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது. தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories