Tamilnadu

“திண்டுக்கல் அருகே ஊராட்சி மன்ற தலைவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்” : போலிஸார் தீவிர விசாரணை !

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்துள்ள சத்திரபட்டியைச் சேர்ந்தவர் இந்திரா. இவர் இவரது கணவர் பிரவீன்குமார் மற்றும் இரண்டு மகன்களுடன் சென்னம நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

இந்திரா பிரவீன்குமார் தம்பதியர் சென்னம நாயக்கன்பட்டியிலேயே தென்னை மட்டை நார் தயாரிக்கும் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போடியிட்டு சந்திரபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா வெற்றி பெற்றார்.

கடந்த 11 மாதமாக சென்னம நாயக்கன்பட்டியில் இருந்துக்கொண்டு சத்திரபட்டிக்கு அடிக்கடி வந்துச் சென்று தனது உள்ளாட்சி பணியை இந்திரா செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதியர்களுக்குள் ஏற்பட்ட மன உளைச்சல், வாக்குவாதமாக மாறி, கணவன் மனைவி இருவரும் பேசமால் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் மன உளைச்சலில் காணப்பட்ட இந்திரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. தனையடுத்து இந்திராவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தாடிகொம்பு போலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா, தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.