Tamilnadu
“வாக்கு எண்ணிக்கையின் போதும் குளறுபடிகளில் ஈடுபடலாம்” : ‘BJP -JUD’ சதியை முறியடிக்க RJD கூட்டணி திட்டம்!
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், வாக்களித்து விட்டு வெளியேவரும் வாக்காளர்களிடம் கருத்துக்கேட்கும் பணியில் 6 ஊடகங்கள் குழு ஈடுபட்டிருந்தன. இந்த 6 குழுவினருமே ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறியிருக்கின்றன.
நவம்பர் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த கருத்துக்கணிப்புகள் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடுமையான முறையில் வீழ்ச்சியடையும் என்று கூறுகின்றன.
குறிப்பாக, சி.என்.என். நியூஸ் 18, டுடே, சாணக்யா உள்ளிட்ட ஊடகங்கள் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மகாகத்பந்தன் கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெற்று, 180 இடங்களைக் கைப்பற்றும் என்றுதெரிவித்துள்ளனர்.
அதேப்போன்று பா.ஜ.க கூட்டணி 34 சதவீத வாக்குகளைப் பெற்று 55 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறியிருக்கிறது. இதனால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களை சோனியா காந்தி பாட்னாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறிப்பாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆர்.ஜே.டி கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதாலும், வாக்கு எண்ணிக்கையின் போதும் அதன் பின்னரும் பா.ஜ.க, ஜே.டி.யு கட்சிகள் ஏதேனும் குளறுபடிகளில் ஈடுபடலாம் என்பதால் நிலமையக் கவனிக்க டெல்லியிலிருந்து ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, அபிலாஷ் பாண்டே ஆகியோரை சோனியாகாந்தி பாட்னாவுக்கு அனுப்பியுள்ளார்.
பா.ஜ.க., ஜே.டி.யு கூட்டணிகள் தேர்தல் வெற்றி பெற என்ன வேண்டுமாலும் குளறுபடிகளில் ஈடுபடும். அதனைத் தடுக்க ஆர்.ஜே.டி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!