Tamilnadu
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,334 பேருக்கு கொரோனா தொற்று - 20 பேர் பலி: கொரோனா நிலவரம் ! #COVID19
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 2,334 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,43,822ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், தமிழகத்தில் கொரோனாவால் இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் பலி எண்ணிக்கை 11,344 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 75,384பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1 கோடியே 1,05,61,722 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,04,862 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா குணமடைந்து இன்று மட்டும் 2,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7,13,584 ஆக உள்ளது. தற்போது 18,894பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
“பா.ஜ.க.வின் இன்னொரு கிளை தான் த.வெ.க ; முதல்முறையாக உண்மையை சொன்ன விஜய்” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்குவது மக்கள் விரோத முடிவு : பெ.சண்முகம் கண்டனம்!
-
தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!