Tamilnadu

“நெற்குன்றத்தில் கல்குவாரி அமைந்தால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அடியோடு அழியும்” : கிராம மக்கள் வேதனை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமையூலூர் என பல கிராமங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் நெற்குன்றம் கிராமத்தில் 15 ஏக்கரில் புதியதாக ஒரு கல்குவாரியும் அதன் அருகே மற்றொரு நான்கு கல்குவாரியும் அமையவுள்ளது. இந்த புதிய ஐந்து கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மற்றும் மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் மக்கள் நேரடியாக சென்று பல முறை மனு கொடுத்துள்ளனர்.

ஏரிகள் நிறைந்த ஒருங்கினைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்கு அடுத்தபடியாக எடமச்சி கிராமத்தில் உள்ள ஏரி மிக பெரிய ஏரி. இந்த ஏரியை நம்பி ஆனம்பாக்கம், நெற்குன்றம், எடமச்சி, கணதிபுரம், பொற்பந்தல், மாமண்டூர், பாலேஸ்வரம், சின்னாலம்பாடி, மெய்யூர் ஓடை என 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்

இந்த பகுதியில் கல்குவாரிகள் அமைந்தால் ஏரி முழுவதுமாக சேதமடையும், இயற்கையான மலை பகுதி மற்றும் காடுகள் முழுமையாக அழிக்கப்படும் விலங்குகள் மலை, காட்டு பகுதிகளில் இருந்து கிராமத்தில் சுற்றி திரிந்து பல பிரச்சனைகள் ஏற்படும்.

கல்குவாரிகளில் வெடி வைத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான வீடுகள் அனைத்தும் சேதமடையும் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடையும், எங்கு பார்த்தாலும் தூசு பறக்கும் லாரிகள் அடிக்கடி சென்று வந்தால், விபத்து அதிகம் ஏற்படும் சாலைகளும் சேதமடையும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியும் காற்று மாசுபடும் என மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்கு நேரிடும்.

குறிப்பாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முற்றிலும் அழியக்கூடிய நிலை உருவாகும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலையத்திற்க்கு ஆண்டு தோறும் பல நாட்டில் இருந்து பறவைகள் இனபெருக்கம் செய்து, சொந்த நாடு திரும்புவது வழக்கம்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு நீர் ஆதாரமே எடமச்சி ஏரி தான். இந்த ஏரி தண்ணீர் தான் வேடந்தாங்கள் செல்கின்றது.அதுமட்டும் இல்லாமல், நெற்குன்றத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்தில் உள்ளது.

அங்குள்ள அனைத்து வெளி நாட்டு பறவைகளுக்கு உணவு எடமச்சி ஏரியும் அதன் அருகே உள்ள மலை மற்றும் காட்டு பகுதிதான். வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்தில் இருந்து இரைகாக காலையில் வந்து இரைகளை தேடிவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் வேடந்தாங்கல் திரும்பும்.

எனவே, இந்த நெற்குன்றம், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம், மாமண்தூர் பகுதிகளில் புதிதாக கல்குவாரிகள் அமைத்தால், வேடங்தாங்கல் பறவைகள் சரணாலயம் நிரந்தரமாக மூடகூடிய அபாயம் ஏற்படும். அதுமட்டுமல்லாது, கல்குவாரி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

இயற்கை வளங்களும் அழியக்கூடிய நிலை உருவாகும். எனவே புதிய கல்குவாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என நெற்குன்றம், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம், சின்னாலம்பாடி, மாமண்தூர், மெய்யூர் ஓடை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “உருகும் பனிப்பாறை : உலக நாடுகள் ஒன்றுபடவில்லை என்றால் நாம் அழிந்துபோவோம்” : சூழலியல் போராளிகள் ஆவேசம்!