Tamilnadu
“வேலை கிடைத்தால் உயிரை தருவதாக வேண்டிய நேர்த்திக்கடனுக்காக வங்கி அதிகாரி தற்கொலை” : பெற்றோர் அதிர்ச்சி !
நாகர்கோவில் மாவட்டம் எள்ளுவிளை பத்தன்காடை சேர்ந்தவர் செல்ல சுவாமி. 32 வயதாகும் இவரது மகன் நவீன் படித்துவிட்டு, வேலையில்லாமல் விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில், வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று, மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில், உதவி மேலாளராக பணி கிடைத்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து வேலை செய்து வந்த நவீன் நேற்று அதிகாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து காலை நாகர்கோவில் வந்துள்ளார்.
நவீன் வருகைக்காக காத்திருந்த பெற்றோர்கள் செல்போன் மூலம் தொடர்ந்து அலைத்தவண்ணம் இருந்துள்ளனர். நாகர்கோவில் வந்து இறங்கிய நவீன் வீட்டிற்குச் செல்லாமல், புத்தேரியில், உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கிடந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த ரயில், நவீன் மீது ஏறிச் சென்றதில், தலை துண்டிக்கப்பட்டு நவீன் இறந்து போனார். இதுபற்றித் தகவல் அறிந்து வந்த ரயில்வே போலிஸார் நவீன் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே நவீன் குடும்பத்திற்கு தகவல் கொடுப்பட்டு, மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது, நவீனின் பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார், நவீனின் சட்டை பையில் இருந்து ஒரு கடிதத்தை கடிதம் கைப்பற்றினர். தற்கொலை செய்வதற்கான காரணத்தை நவீன் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
அந்த கடித்தில், “நான் படித்து விட்டு பல இடங்களில் வேலை தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் எனக்கு வேலை கிடைத்தால், என் உயிரையே நேர்த்திக் கடனாக தருகிறேன் என கடவுளிடம் வேண்டியிருந்தேன். தற்போது எனக்கு வேலை கிடைத்துள்ளது, எனவே நான் வேண்டியபடி எனது உயிரை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன்.” என எழுதி வைத்துள்ளார்.
இதனைக் கண்ட பெற்றோர் மற்றும் போலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதுபற்றி நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலிஸார் தற்கொலை வழக்காக பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேண்டிக்கொண்ட வேலை கிடைத்ததற்காக, கடவுளுக்கு காணிக்கையாக உயிரை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது பெரும் முட்டாள் தனமானது; மூட நம்பிக்கையின் உச்சம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!