Tamilnadu
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை ’கிடுகிடு’ உயர்வு... பொதுமக்கள் வேதனை!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புதிய காற்றழுத்த சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்பதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை ரூ. 40 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ. 65 ஆக உயர்ந்தது. ரூ.45க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று ரூ.70-க்கு என்று மொத்த விற்பனையிலே இந்த விலைக்கு விற்கப்படுகிற நிலையில் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ75 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்யபடுகிறது.
இதேபோன்று சந்தையில், ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.15-லிருந்து ரூ.20 வரையும், நவின் தக்காளி ரூ.22-ல் இருந்து ரூ.25 வரையும், கேரட் ரூ.65-லிருந்து ரூ.70 வரையும், பீன்ஸ் ரூ.30-ல் இருந்து ரூ.40 வரையும், பீட்ரூட் ரூ.25-ல் இருந்து ரூ.30 வரையும் விற்கப்படுகிறது.
மேலும், சவ்சவ் ரூ.10-ல் இருந்து ரூ12 வரையும், முள்ளங்கி ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், வெண்டைக்காய் ரூ.20-ல் இருந்து ரூ 25 வரையும் , கத்திரிக்காய் ரூ.20-ல் இருந்து ரூ.25 வரையும், பாகற்காய் ரூ.20-ல் இருந்து ரூ25 வரையும், புடலங்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், கோவைக்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், சுரைக்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், முருங்கைக்காய் ரூ.25-ல் இருந்து ரூ.30 வரையும், பச்சை மிளகாய் ரூ.20-ல் இருந்து ரூ.25 வரையும் , இஞ்சி ரூ.30-ல் இருந்து ரூ.50 வரையும், அவரைக்காய் ரூ.30-ல் இருந்து ரூ.35 வரையும் விலை உயர்த்தி விற்கப்பட்டது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!