Tamilnadu

'தமிழகத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு திடீர் தட்டுப்பாடு' - என்ன செய்கிறது எடப்பாடி அரசு?!

உதாரணமாக இந்த கொரோனா காலத்திற்கு முன் வழக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில், 200 டன் ஆக்சிஜன் தேவை ஏற்படும் நிலையில் தற்போது 600 டன்னாக அதிகரித்துள்ளது. இதேபோல், கொரோனாவால், தொழிற்சாலைகள் இயங்காத நிலையில் ஒரு மாதத்திற்கு 400 டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், தற்போது 300 டன்னாக அதன் தேவை குறைந்துள்ளது.

தமிழகத்தில், சென்னை, ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளில் மட்டுமே திரவ நிலை ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் தான் தமிழகத்தின் மொத்த ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே தற்போது உள்ள இந்த கொரோனா சூழலில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் பெறப்பட்டு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனம் தினமும், 38 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. ஆனால் கொரோனா காலத்திற்கு முன் வெறும் 7 டன் திரவ ஆக்சிஜன் மட்டுமே மருத்துவமனைகளால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது, தினமும் 30 டன்னுக்கும் அதிகமாகப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் ஆக்சிஜன் விற்பனையாளர்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் சென்று அதிக விலை கொடுத்து திரவ ஆக்ஸிஜன் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் அதைச் சமாளிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க தீவிரம் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

Also Read: “அடிக்கல்நாட்டியது ஓரிடம்; தடுப்பணை கட்டுவது வேறொரு இடமா?”-முதல்வருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விவசாயிகள்!