Tamilnadu
சேலத்தில் குளர்சாதன பெட்டியில் அடைத்து வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி பலி: அதிர்ச்சி தகவல்!
சேலம் கந்தம்பட்டி பகுதியில் சகோதரரால் உயிரோடு குளர்சாதன பெட்டியில் கைகள் கட்டப்பட்ட நிலையில், காவல்துறையினரால் மீட்கப்பட்ட முதியவர் பாலசுப்ரமணிய குமார் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
சேலம் மாவட்ட கந்தம்பட்டியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்துவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், சகோதரர் சரவணன் மற்றும் சகோதரியின் மகள்கள் கீதா, ஜெய ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், பாலசுப்ரமணிய குமார் கடந்த சில நாட்களாக உடல் நிலை, பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பாலசுப்ரமணிய குமாரை உயிரோடு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, இறப்பதற்காக விடிய விடிய காத்திருந்தார் அவரது சகோதரர் சரவணன்.
இதனிடையே, குளிர்சாதனப் பெட்டியை எடுக்க வந்த தொழிலாளர்கள் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சரவணன் மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் பாலசுப்ரமணிய குமார், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!