Tamilnadu
சென்னையில் நீங்காத கொரோனா துயரம்.. ஒரே நாளில் 1,148 பேர் பாதிப்பு.. தமிழகத்தின் இன்றைய #CoronaUpdates
தமிழகத்தில் புதிதாக 89 ஆயிரத்து 67 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், 4 ஆயிரத்து 410 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 1,148 பேருக்கும், கோவையில் 395, சேலத்தில் 263, செங்கல்பட்டில் 255 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கடுத்தபடியாக, திருவள்ளூரில் 192, நாமக்கல்லில் 148, திருப்பூரில் 146, ஈரோட்டில் 126, கடலூரில் 120, வேலூரில் 114, காஞ்சிபுரத்தில் 112 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் சென்னையில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருவது சென்னைவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 49 பேர் கொரோனா பாதிப்பால் இறந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 55 பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஆகவே தற்போது 41 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?