Corona Virus

ரூபாய் நோட்டு, செல்போன் திரை போன்றவற்றில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் உயிர்வாழும் - ஆராய்ச்சியில் தகவல்!

30 முதல் 40 டிகிரி செல்சியஸில் கொரோனா வைரஸின் வீரியம் குறைகிறது என்றும் இந்த வெப்பநிலையில் கொரோனா வைரஸால் அதிகம் தாக்குப்பிடிக்க முடிவதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரூபாய் நோட்டுகள், செல்போன் திரை, கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற மென்மையான மேற்பரப்பில் கொரோனாவால் 28 நாட்கள் உயிர்வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக கோவிட் வைரஸ் மென்மையான மேற்பரப்பில் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை உயிர்வாழ முடியும் என்று பரிந்துரைத்த முந்தைய ஆராய்ச்சிக்கு மாறாக, தற்போது ஆஸ்திரேலியா நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓவின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு இருட்டு அறையில் 68 பாரன்ஹீட் வெப்பநிலையில் வைரஸ் பாதுகாக்கப்பட்டு இவ்வாறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி வைராலஜி ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டது.

ரூபாய் நோட்டு, செல்போன் திரை போன்றவற்றில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் உயிர்வாழும் - ஆராய்ச்சியில் தகவல்!

சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது?

ஆய்வின்படி, 20 டிகிரி செல்சியஸில், கொரோனா வைரஸ் அல்லது SARS-CoV-2 வைரஸ் 28 நாட்களுக்குப் பிறகும் கண்டறியப்பட்டது. "post inoculation, for all non-porous surfaces" என்ற பரிசோதனையின் போது கண்ணாடி,பிளாஸ்டிக், வினைல் மற்றும் ரூபாய் நோட்டுகளில் கண்டறியப்பட்டது.

இந்த தொற்று வைரஸ் கண்ணாடி, எஃகு மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற பொதுவான மேற்பரப்புகளிலிருந்து 20 டிகிரி செல்சியஸில் 28 நாட்கள் வரை வைரஸ் தனிமைப்படுத்தப்பட்டதில் அதன் செயல்திறன் அதிக அளவில் தாக்குப்பிடித்துள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் 30 முதல் 40 டிகிரி செல்சியஸில் கொரோனா வைரஸின் வீரியம் குறைகிறது. இந்த வெப்பநிலையில் கொரோனா வைரஸால் அதிகம் தாக்குப்பிடிக்க முடிவதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வழுவழுப்பான தளங்களில் அதிக நேரம் கொரோனா வைரஸ் உயிர் வாழ்கிறது. ரூபாய் நோட்டுகள்,கண்ணாடிகள், பிளாஸ்டிக், ஸ்மார்ட் போன்களின் திரை, போன்ற வழுவழுப்பான தளங்களில் 28 நாட்கள் வரையிலும் உயிருடன் இருக்கும்.

மேலும், எச்சில், சளி போன்றவற்றின் மூலம் கொரோனா பரவுகிறது என்பது நமக்குத் தெரியும். அதேபோல் மனித உடலின் கொழுப்பு உள்ளிட்டவற்றில் கொரோனா வைரஸ் வாழும் நேரம் அதிகமாகியுள்ளது. ஆனால், இன்னும் இந்த தகவல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவை’ இவ்வாறு அந்த ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories