Tamilnadu

“திடீரென சீல் வைத்து காலி செய்ய சொன்னால் எங்கே போவோம்?” : கலங்கும் தூத்துக்குடி வியாபாரிகள் !

தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சந்தை வளாகம் உள்ளது இங்கு டீ கடை, ஓட்டல்கள், மீன் மற்றும் இறைச்சி, மண்பானைச்சட்டி கடை, பிரியாணி கடை, உட்பட 60க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இங்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடைகள் இயங்கி வந்தன.

இங்குள்ள கடைகள் அனைத்தும் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளே சொந்தமாக கட்டியது , இந்தக் கடைகளுக்கு மின்சாரம் எடுத்தும்,மாநகராட்சிக்கு வாடகை பணம் குத்தகைதார் மூலம் வழங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் நவீன வணிக வளாகம் கட்ட பட உள்ளதாக தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர். எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த சந்தை வளாகத்தை திறக்க வேண்டுமென மாநகராட்சிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனாலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் இந்த வளாகத்தை திறக்கவில்லை இதைத்தொடர்ந்து இந்த வியாபாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று 5வது நாளாக திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு, ”திடீரென சீல் வைத்து காலி செய்ய சொன்னால் எங்கே போவோம். தங்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுமட்டுமின்றி அமைச்சர் கடம்பூர் ராஜு காலில் விழுந்து கேட்டும் அமைச்சர் இதுவரை கண்டுகொள்ளவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டினார்கள்.

உயர் நீதிமன்ற உத்தரவுபடி சந்தேகத்தை மாநகராட்சி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாளை தூத்துக்குடி வருகைதரும் தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர் இந்த பிச்சை எடுக்கும் போராட்டம் காரணமாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: அமைச்சர் கடம்பூர் ராஜு காலில் விழுந்து கதறி அழுத பெண் வியாபாரி : கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்!