Tamilnadu
"தலைகவசம் போடாம ஏன் ஆட்டோ ஓட்டுனீங்க" - அபராதம் விதித்த குமரி போக்குவரத்து காவல் துறை!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் செல்வாகரன். இவரது மொபைலுக்கு அதிர்ச்சி மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 1600 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கூறப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.
ஆன்லைனில் தனக்கு வந்த அபராதம் பற்றி தேடிப்பார்த்ததில், செல்வாகரன் குலசேகரம் அருகே தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதாக பதிவாகியிருந்தது. செல்வாகரனின் ஆட்டோவின் பதிவு எண்ணில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தன்னிடம் இரு சக்கர வாகனம் இல்லை என்றும், கொரோனா காலத்தில், சவாரி இல்லாமல் இருக்கும் தான் வாகனத்தை பெரிதும் இயக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும், குலசேகரம் தான் இருக்கும் இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் என்றும், அங்கு தான் செல்லவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஊரடங்கில் வருமானம் இல்லாமல் தவிக்கும் தனக்கு 1600 அபராதம் விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் செல்வாகரன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கோவையில் 11,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் : புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் சாடியவல் யானைகள் முகாம் : திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர் : வீரபாண்டியன் கடும் கண்டனம்!