Tamilnadu
முதுபெரும் சி.ஐ.டி.யூ தலைவர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு தி.மு.க தலைவர் இரங்கல்!
சி.ஐ.டி.யு-வின் முதுபெரும் தலைவர் தோழர் கே.வைத்தியநாதன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும், தொழிற்சங்கத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கே.வைத்தியநாதன் மறைவு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சி.ஐ.டி.யூ தலைவரான கே.வைத்தியநாதன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாகத் தனது 97-வது வயதில் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் - முன்னேற்றத்திற்காகவும் தன்னலமற்ற சேவையாற்றிய போராட்டக் குணமிக்க சிறந்த தொழிற்சங்கவாதியைத் தொழிலாளர் வர்க்கம் இழந்திருப்பது பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!