Tamilnadu

காப்பீடு கட்ட பணமில்லை: ஆட்டோவுக்கு FC செய்ய மறுத்த RI.. விரக்தியில் ஆட்டோவை எரித்த கதறிய டிரைவர்! 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2.85 லட்சத்துக்கும் மேலாக இருந்தாலும், வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் லட்சோப லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் போராடி வருகின்றனர்.

வேலையின்றி வருமானமின்றி அடுத்த வேளை உணவுக்காக கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு கடன் தொல்லைகள், வீட்டு வாடகை என கூடுதல் இன்னல்களும் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து. இவர் சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருகிறது. நேற்று தனது ஆட்டொவுக்கு எஃப் சி செய்வதற்காக அண்ணா நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்.

அங்கு, அவரது ஆட்டோக்கான காப்பீடு காலாவதியாகிவிட்டது என ஆர்.ஐ. தெரிவித்திருக்கிறார். ஊரடங்கு காரணமாக வருமானம் ஏதும் இல்லாததால் இன்சுரன்ஸை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக தன்னுடைய நிலையை தாண்டமுத்து எடுத்துரைத்திருக்கிறார்.

இருப்பினும் அதனை காதில் வாங்கிக் கொல்லாமல் விடாபிடியாக எஃப் சி செய்து தரமாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதனால் விரக்தியும், ஆத்திரமும் ஒரு சேர கொண்ட ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து தன்னுடைய ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வில்லிவாக்கம் தீயணைப்புத் துறையினர் தீயிடப்பட்ட ஆட்டோவை அணைத்தனர். அதன் பிறகு ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து மீது அண்ணாநகர் காவல்துறை பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Also Read: வருமானம் இல்லாதபோது வாடகை கேட்டதால் ஆத்திரம்: உரிமையாளர் ஓட ஓட விரட்டிக்கொலை; குன்றத்தூரில் பகீர் சம்பவம்

ஊரடங்கு சமயத்தில் வீட்டு வாடகை உரிமையாளர்கள் கேட்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியது போன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கென உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக முதலமைச்சரிடம் புகாரளிக்க முற்பட்டாலும் “உலக அளவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என துதி பாடத் தொடங்கிவிடுகிறார் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Also Read: வாடகை கொடுக்காதவரை போலிஸை விட்டு தாக்கிய அதிமுக பிரமுகர் : மனமுடைந்த பெயிண்டர் தீயிட்டு தற்கொலை முயற்சி!