Tamilnadu
“வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு - மழை பெய்யும்” வானிலை அப்டேட்!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை தொகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பொய்யும் என சென்னை வானிலை தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் மலைச்சரிவு, மழைபொழிவு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தேவலாவில் 15 சென்டி மீட்டரும், அவலாஞ்சியில் 10 சென்டி மீட்டரும், கூடலூர் பஜாரில் 9 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூர் பள்ளிப்பட்டு, நீலகிரி பந்தலூர் தலா 8 சென்டி மீட்டர் மழையும், கோவை சின்னகல்லார், நீலகிரி மேல் பவானி தலா ஏழு செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் , வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த மற்றும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அடுத்த 5 நாட்களுக்கு கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் விசுக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Also Read
-
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்றும் த.வெ.க! : பெயர் மாற்றி ‘ஏமாற்றும்’ அவலம்!
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!