Tamilnadu

முதல் முறையாக ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் பலி.. புதிதாக 5,879 பேருக்கு தொற்று பாதிப்பு!  #CoronaUpdates

தமிழகத்தில் மேலும் 5,879 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 58 ஆயிரத்து 243 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்திலேயே இருந்த 5 ஆயிரத்து 822 பேருக்கும், வெளி மாநில, நாடுகளில் இருந்து வந்த 57 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,074 பேருக்கும், காஞ்சியில் 368, தேனியில் 327, செங்கல்பட்டில் 314, திருவள்ளூரில் 305, விருதுநகரில் 286, தூத்துக்குடியில் 243, திருவண்ணாமலையில் 242, கோவையில் 238, குமரியில் 198, வேலூரில் 197 என பட்டியல் நீள்கிறது.

ஆகவே இதுவரையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.51 லட்சத்து 738 ஆக அதிகரித்துள்ளது. வெளி நாடு மற்றும் மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 5 ஆயிரத்து 490 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 7 ஆயிரத்து 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 738 ஆக உள்ளது.

இதுவரையில், 1.90 லட்சத்து 966 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேப்போல கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உள்ளது.

இந்த பலி எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளது. அந்த 99 பேரில் 9 பேருக்கு எவ்வித இணை நோயும் இல்லாமல் கொரோனாவால் மட்டுமே உயிரிழந்தவர்களாவர்.

மொத்தமாக தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,140, செங்கல்பட்டில் 253, மதுரையில் 247, திருவள்ளூரில் 246, காஞ்சிபுரத்தில் 112, விருதுநகரில் 90 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

Also Read: “ஒரே மாதத்தில் 19,111 பேர் பலி” : கொரொனா உயிரிழப்பு சதவீதம் குறைவாகதாக மக்களை ஏமாற்றும் மோடி அரசு!