Corona Virus

“ஒரே மாதத்தில் 19,111 பேர் பலி” : கொரொனா உயிரிழப்பு சதவீதம் குறைவாகதாக மக்களை ஏமாற்றும் மோடி அரசு!

இந்தியாவில் இதுவரை 36 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே 19,111 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரொனா தொற்று குறைந்து வருவதாகவும், உயிரிழப்பு சதவீதம் குறைவாக உள்ளதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், உயிரிழப்பு கணக்குகள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன.

இதுவரை 36 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் ஜூலை மாதத்தில் மட்டுமே 19,111 பேர் பலியாகியுள்ளனர். அதாவது 52% உயிரிழப்பு ஒரு மாதத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளது. அதே போன்று 53% பாதிப்பு ஜூலை மாதத்தில்தான் பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டில் 11 லட்சத்துக்கு பத்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை முதல் தேதி அன்று 5,85,493 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அது தற்போது 16,95,988 ஆக உயர்ந்துள்ளது.

“ஒரே மாதத்தில் 19,111 பேர் பலி” : கொரொனா உயிரிழப்பு சதவீதம் குறைவாகதாக மக்களை ஏமாற்றும் மோடி அரசு!

கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

கொரோனா சோதனை இரண்டு கோடியை நெருங்கியுள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி ஐந்து லட்சம் பேருக்கு (1,05,32,074) சோதனகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 1,93,58,659 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5,25,689 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் இறுதிக்குள் நாளொன்றுக்கு ஒருலட்சம் பேருக்கு சோதனை நடத்த என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories