Tamilnadu

கொரோனா சிகிச்சைக்கு 16 லட்சம் கட்டணம்?- தனியார் மருத்துவமனை வசூல் வேட்டை: கதிகலங்கிய நோயாளியின் குடும்பம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கபட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடுதிரும்பும் போது நடந்தப்படும் சோதனை வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதில் நிர்ணயிக்கப்பட்ட அதிக கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் நோயாளிகளை பாதியிலேயே வீட்டிற்கு அனுப்பும் கொடூரம் நடந்துவருகிறது. பேரிடர் காலத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிக்காட்டுதலை தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலன தனியார் மருத்துவமனைக்கள் பின்பற்றவில்லை என்பது சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது சமீபத்தில் கூட கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த, தனியார் மருத்துவமனை வாங்கும் கட்டணங்களின் விபரம் தொடர்பாக, தனியார் செய்தித் தொலைக்காட்சி புலனாய்வு நடத்தியது.

அதில், சென்னையின் குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்க 3 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் நாளொன்றுக்கு படுக்கை கட்டணமாக 1.5 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் நாளொன்றுக்கு மருத்துவ/செவிலியர் பாதுகாப்பு உடைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் செலுத்தவேண்டும் எனவும் தெரியவந்தது. இந்தத் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் மற்றோரு தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா சிகிச்சைக்கு 16 லட்சம் கட்டணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சூளைமேடுபகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், மனோகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படத்தைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது கொரோனா சிகிச்சைக்கு மொத்தமாக 5 லட்சம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதையடுத்து மனோகரன் குடும்பத்தினர் மொத்தமாக பணத்தைக் கட்டியுள்ளார். அதன்பிறகு சிகிச்சைக்கு பிறகு நோய்த் தொற்றில் இருந்து மனோகரன் குணமடைந்துளார்.

ஆனால் இதயத்தில் பிரச்சனை இருப்பதாக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் மீதம் பணம் 11 லட்சத்தை கட்டுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முதலில் 5 லட்சம் செலவாகும் என்று சிகிச்சை அளித்துவிட்டு தற்போது 16 லட்சம் என்றால் என்ன செய்வது என மருத்துவமனை நிர்வாகத்திடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிர்வாகம் காதில் வாங்கிக்கொள்ளாத நிலையில் மகோகரன் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன்பு திரண்டர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு பேரிடர் காலத்தில் பணம் இல்லை என்பதற்காக கொள்ளை நோயிக்கு ஆளான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதும், நோயாளிகளிடம் இருந்து அதிக பணம் பறிப்பதும் மனித உரிமை மீறலாகும். அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: கிருமி நாசினி பயன்படுத்தியதற்கு ரூ.100 வசூல்... கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட மதுரை தனியார் மருத்துவமனை!