Tamilnadu
7 மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை.. தமிழக வானிலை நிலவரம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இதர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.
அதேச்சமயத்தில், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நாளை உள்தமிழகம், தெற்கு கடலோர தமிழகம், நீலகிரி, கோவை, மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நீலகிரி, கோவை, மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதில் நீலகிரியின் தேவாலாவில் 10 செ.மீட்டர் மழையும், செருமுள்ளி, அவலாஞ்சி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஜூன் 18, 19 தேதிகளில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அடுத்த 5 நாட்களுக்கு கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் புதிய பகுதிநேரக் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் அலை 2.5 முதல் 4.4 மீட்டர் உயரம் வரை கொலசல் முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் எழும்பக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்றும் த.வெ.க! : பெயர் மாற்றி ‘ஏமாற்றும்’ அவலம்!
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!