Tamilnadu
“மாநில ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை” : போக்சோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் கைது!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டில் வசித்து வருபவர் தொழிலதிபரின் 13 வயதான மகள் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீராங்கனையான சிறுமிக்கு உடற்பயிற்சி கொடுப்பதற்காக கடந்த 10ம் தேதி திருவொற்றியூரில் இருந்து மகேஷ் என்பவர் வந்துள்ளார்.
அப்போது பயிற்சியின் போது உடலில் கை வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் அலரல் சத்தத்தால் பயந்து அங்கிருந்து மகேஷ் ஓடியுள்ளார்.
இதனையடுத்து சிறுமி தந்தையிடம் கூட, சிறுமியின் தந்தை ஆன்லைன் வாயிலாக அடையார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் தலைமறைவாக இருந்த மகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!