Tamilnadu
சாத்தான்குளம் எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும்... அவர் மீதான புகார்களும்... சமூக வலைதளங்களை சுற்றும் பதிவுகள்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலிஸாரால் கைது செய்யப்படு கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் சிறையிலேயே, அவர்கள் இருவரையும் கொடூரமான முறையில் சித்திரவதைகள் செய்து அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அராஜக போலிஸாரின் இந்தக் கொடூரச் செயல் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும் என அரசை வலியுறுத்தி வருவதோடு, சட்டரீதியாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு துணை நிற்கும் என அறிவித்துள்ளது.
Also Read: “சாத்தான்குளம் கொடூர குற்றத்திற்கு துணைபோகிறதா அரசு?” - என்ன செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்தும், இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சமூக வலைதளங்களில் குரல்கள் வலுத்து வருகின்றன. இதுமட்டுமல்லாமல், இதற்கு முன்னதாக காவல்துறையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மீதான புகார்கள் தொடர்பாக பதிவுகளும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி, 2016-17ம் ஆண்டின் போது திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் பணியாற்றி வந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மீது புகார்கள் அளிக்கப்பட்டதால் அவர் பணகுடி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு, சட்டவிரோத மணல் கடத்தலுக்கு பாலகிருஷ்ணன் உடந்தையாக இருந்ததாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
அதோடு விட்டுவிடாமல், புகாரளிக்க வந்த பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் தவறாக பேசியதாகவும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மீது புகார் எழுந்ததால் துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளான அவர் சாத்தான்குளத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது அங்கும் அப்பாவி தந்தை மகனை கொடுமைப்படுத்தி அநியாயமாக அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பலரது புகார்களுக்கு ஆளாகியுள்ள பாலகிருஷ்ணன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!