Tamilnadu
“புதிய உச்சம் தொட்ட கொரோனா பரவல்” : இன்று மட்டும் 3,509 பேருக்கு கொரோனா - 70,000ஐ கடந்த பாதிப்பு!
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 151 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் மொத்த பாதிப்பு 70,977 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டுமே இன்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 32,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 10,08,974 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!