Corona Virus

5 லட்சத்தை எட்டும் கொரோனா: ஒரே நாளில் 16,922 பேருக்கு பாதிப்பு.. 418 பேர் பலி.. இனியும் தாமதம் தேவைதானா?

இந்தியாவில் கொரோனாவாக் தினந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்து வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக அளவில் கொரோனாவால் அதிகளவில் பாதிப்படைந்துள்ள நாடுகளில் இந்தியா தொடர்ந்து நான்காவது இடத்திலேயே இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதில் உயிரிழப்பு மட்டுமே 14 ஆயிரத்து 894 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 418 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். ஜூன் மாத தொடக்கத்தில் நாளொன்றுக்கு 200 பேர் வீதம் இருந்த இறப்பு எண்ணிக்கை அண்மை நாட்களாக 400க்கும் அதிகமான எண்ணிக்கையை பெற்று வருகிறது.

இதற்கு முறையான மருத்துவமனை வசதிகள் ஏற்படுத்தித் தராததே காரணம் என பலதரப்பினர் குற்றச்சாட்டுகின்றனர். வயதானோருக்கு வெண்டிலேட்டர்கள் வசதி போன்ற எதுவும் அரசு ஏற்படுத்தவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

5 லட்சத்தை எட்டும் கொரோனா: ஒரே நாளில் 16,922 பேருக்கு பாதிப்பு.. 418 பேர் பலி.. இனியும் தாமதம் தேவைதானா?

அதேபோல, 2.71 லட்சத்து 696 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு டிஸ்சார்ஜ் ஆன அனைவருமே கொரோனாவில் இருந்து பூரணமாக மீண்டு வந்துள்ளனரா என இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டுமே இந்தியாவில் 16 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த எண்ணிக்கையில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

75 லட்சத்து 60 ஆயிரத்து 782 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் நேற்று 2 லட்சத்து 7,871 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சோதனை எண்ணிக்கையை மேலும் அரசு அதிகரிக்கவேண்டும் என கோரிக்கைகளை வலுத்துவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், நகர்ப்புறங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் கிராமங்களிலும் கொரோனா பரவல் நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில், அக்டோபர் மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதால், முறையான ஊரடங்கை கடைபிடித்து மக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.

banner

Related Stories

Related Stories