Tamilnadu

ஊரடங்கில் தளர்வு: சிறுமிக்கு வன்கொடுமை.. கர்ப்பிணி மீது அத்துமீறல்.. இயல்பு நிலைக்கு திரும்பியதா தமிழகம்?

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து நடைமுறையில் இருந்த ஊரடங்கில் தளர்வுகளை வழங்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு.

இந்த நிலையில், மாநிலத்திலோ கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் 500க்கு மேல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 538 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் நோய் கட்டுப்பாடுள்ள பகுதிகளை தவிர சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 34 வகையான கடைகளை திறக்கவும் எடப்பாடி அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பி விட்டது என எண்ணி மக்கள் நடமாட்டம் அதிகரிக்க அனைத்து வகையிலும் வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்றச்செயல்கள் அண்மைக்காலங்களாக அதிகரித்து வருவதையும் காணலாம். விழுப்புரத்தில் தந்தை மீது கொண்ட பகை காரணமாக சிறுமியை உயிரோடு தீயிட்டு கொள்ளுத்திய அதிமுகவினரின் செயலே அதற்கு முழு முதற் சாட்சியாக உள்ளது.

அதனடுத்தபடியாக, சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியை உறவினரே பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து சிறுமியின் உறவினர் திருமலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோல, தூத்துக்குடியில் சந்தோஷ் நகரைச் சேர்ந்த போலிஸார் சின்னதுரை சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை காண சொந்த ஊருக்கு வந்து சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.

Also Read: “கொலைகள் புரியத் தயங்காத அ.தி.மு.க” - பா.ஜ.க-வின் வளர்ப்பு பிள்ளையாக ஆளும் வெறியில் அராஜகம்!

இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள், சின்னத்துரையின் மனைவி முத்துராணியையும், அவரது உறவினரையும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரும் நேரில் சென்று விசாரித்ததோடு, தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தனது உறவினரை போலிஸார் தாக்குவதை வீடியோ எடுத்த முத்து ராணியையும் கீழ் தள்ளியிருக்கார்.

இதனால், மயக்கமடைந்த முத்துராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில் அங்கு இங்கு என இருந்த ஒரு சில குற்றச்செயல்கள் அனைத்தும், தற்போது தளர்வு அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் வரிசையாக நடந்தேறுவது தமிழகம் உண்மையிலேயே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதோ என கேள்வி எழுகிறது.

Also Read: “கொலைகார அ.தி.மு.க” - உண்மையை மூடி மறைக்க நினைக்கும் பா.ம.க, நா.த.க!