விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர சம்மதம் தெரிவித்தால் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்தவும் பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்த சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், பிசிசிஐ-யின் பணபலத்துக்கு இதர ஆசிய அணிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இறுதியில் பாகிஸ்தான் இறங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆசிய கோப்பைக்கான அட்டவணையில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெற்றன.

சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !

தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் இது குறித்த அறிவிப்பு வெளிவரும் முன்னரே இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்த ஏற்பாடுகளில் பாகிஸ்தான் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர சம்மதம் தெரிவித்தால் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்தவும் பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடைபெறும் என்றும், பிற அணிகள் பங்கேற்கும் போட்டிகளை கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடத்தவும் முடிவு செய்துள்ளார்.

அதோடு லாகூர் இந்திய எல்லைக்கு அருகில் உள்ள நகரம் என்பதால் இந்திய ரசிகர்கள் அங்கு அதிகளவில் வருவார்கள் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதோடு இந்திய அணி பாகிஸ்தானுக்கு நிச்சயம் வரும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories