Tamilnadu
“பெண்களை மிரட்டும் காசியின் ஆடியோ - தற்போது வெளியானதன் பின்னணி என்ன?” : போலிஸார் தீவிர விசாரணை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரி தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி என்ற சுஜி. இவர் சென்னையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்ததுடன் அவரது புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதேபோல் காதலிப்பதாக கூறி பல பெண்களை நம்பவைத்து, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொடர்பு வைத்துள்ளார். அதோடு பெண்களுக்குத் தெரியாமலேயே வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அப்படி மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த வாரம் காசி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்சியாக அவன் மீது புகார் கொடுத்து வருகின்றனர். இதனிடையில், சமீபத்தில் காசிக்கு உதவியாக இருந்த இரண்டு பேரில் முக்கிய குற்றவாளியான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ என்பவரை போலிஸார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காசி பெண்களை மிரட்டி பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியான ஆடியோக்களில் இளம்பெண்கள் மற்றும் சிலருடன் காசி பேசுவது வெளியாகியுள்ளது. அப்படி தற்போது வரை 9 ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆடியோ அனைத்திலும் தொடக்கம் மற்றும் முடிவு இல்லாததால் திட்டமிட்டு எடிட் செய்து வெளியிப்பட்டுள்ளது என போலிஸ் தரப்பில் கூறுகின்றனர்.
மேலும் இந்த ஆடியோ காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியிட்டதா? அல்லது காசி மீது தொடர்ந்து பெண்கள் புகார் கொடுத்துவருவதால் அவர்களை அச்சுறுத்த வெளியிடப்பட்டுள்ளதாக என்ற கோணங்களில் போலிஸார் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
காசிக்கு உதவிய சிலரை பிடிக்க போலிஸார் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில் இந்த ஆடியோ மேலும் போலிஸாருக்கு சவாலாக இருக்கலாம் என எண்ணுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ விவகாரம் சமூக வலைதளங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!